இராஜராஜ சோழன் காலத்தில் "தேவடிடியார்கள்" எனச் சொல்லப்பட்டவர்கள் இருந்தனர்.அவர்களும் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் இங்கிருந்த "தேவதாசிகளும்" ஒன்றல்ல...
சோழர்கள் காலத்தில் தேவரடியார்கள் எனப்படும் ஆடல் மகளிர் பரத நாட்டியத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று கோயில்களில் தொண்டு புரிந்தார்கள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டார்கள். #தற்காலத்தில் நகரத்தில் தோன்றியுள்ள விலைமாதர்களை மனத்தில் கொண்டு அக்காலத்திய ஆடற்பெண்டிரை நாம் மதிப்பிடுவது பெரும் தவறு என்பது அக்காலத்துக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர்கள் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment