Saturday, 1 September 2018

செப்பேடுகள்

#திருவாலங்காட்டுச் செப்பேடுகள்...

#இராசராச சோழனின் மகன் இராசேந்திர சோழன் கி.பி.1022 ம் ஆண்டில் தானம் வழங்கிய நிலங்களைப் பற்றி இச் செப்பேடுகள் (மொத்தம் 31) கூறுகின்றன...

#பார்ப்பணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டிருந்த பழையனூர் கிராமம் பிரிக்கப்பட்டு திருவாலங்காட்டு கோயிலுக்கு தேவதானமாக அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு அதன் பின்னர் பூரண வரிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளது... அதுவரை பார்ப்பனர்களிடமிருந்த அந்த நிலம் அதன் பிறகு உழுபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்தச் செப்பேட்டின் ஆணை தெரிவிக்கிறது.

#சோழர்கள் ஆட்சியில் உழுபவர்கள் நிலம் பறிக்கப்பட்டு பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டது என்று நிலவிவரும் கருத்தை உடைத்து இதுபோன்ற பல நிலப் பரிமாற்றங்கள் சமூகத்தில் பல பிரிவினரிடையே நடந்தது வழக்கமான ஒன்று தான். நிலம் தானம் வழங்கப்பட்டதில் வர்ணாசிரம உயர்வு தாழ்வு ஏதுமில்லை என்பதை அச்செப்பேடுகள் தெளிவாக்குகின்றன.
________________________________________________

#பார்ப்#பார்ப்பனர்களுக்கு இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்தாரா?

#இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாய் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக வழங்கினான...அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல... சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர்,கணி,காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்கள் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில் இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது…
#எடுத்துக்காட்டாக சில….

“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”

“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”

“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”

“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”

“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”

“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”

என்று கூறப்பட்டுள்ளது….

#மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்….யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை...

#பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு... அவற்றின் உரிமையாளர் அரசு தான்.

#மேற் கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை…

#முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும், இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும், மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்... நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது... அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்….

“....யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்” என்று கூறுகிறது.

#ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது…

ஆதாரம் :--

”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” சி.கோவிந்தராசன்,சி.கோ.தெய்வநாயகம்…
--பதிப்புத்துறை--மதுரை காமராசர் பல்கலைக்கழகம்….

அப்பப்பா எம்பூட்டுப் பொய்யி!!!!

#திராவிடப் பொய்களை உடைப்போம். இராசேந்திர சோழன் பிரம்மதேய நிலங்களை வரியில்லாத தானமாக அளித்ததாக சிலர் என் பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருந்தனர்... மேலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோழர்கள் இறையிலி நிலங்களை வழங்கியதாகவும் பின்னூட்டம் இட்டிருந்தனர்..

#அவர்களுக்கான பதில்….

#இராசேந்திரச் சோழன் கி.பி.1020 ஆம் ஆண்டில் கீழ்த் தஞ்சைப் பகுதியில் இருந்த 51 ஊர்களை ஒன்றாக இணைத்து ஓரூராக்கி தன் தாய் பெயரிட்டு “திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம்” என்று பிரம்மதேயமாக வழங்கினான...அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல... சமுதாயத் தொழிலாளர்களாகிய கணக்கர்,கணி,காவிதி, உவச்சர், நாவிதர், குசவர், தைச்சர், கொல்லர், அம்பலம் மெழுகுவோர், தண்ணீராட்டுவோர் முதலியவர்கள் அந்த திரிபுவன சதுர்வேதி மங்கலத்தில் இறையிலி பெற்றவர்களாக கரந்தைச் செப்பேடுகளில் 57 ஆவது செப்பேட்டில கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது…
#எடுத்துக்காட்டாக சில….

“வீரசோழ வளநாட்டு உதயமாத்தாண்ட சதுர்வேதி மங்கலத்து உச்சவன் கலன் கிளாவனுக்கு உவச்சப் பங்கொன்று”

“நித்த வளநாட்டு வீரசோழ வளநாட்டு மகாதேவி சருப்பேதி மங்கலத்து பிடாகை திருபுவன மாதேவி நல்லூர் நாவிசன் பிரமன் திருவடிகளுக்கு நாவிசப் பங்கு அரை”

“ஜநநாத சதுர்வேதி மங்கலத்து மத்யஸ்தன் முன்னூற்றவன் நாற்பத்து மூவனுக்கு கணக்கப் பங்கொன்று”

“அருள்மொழி தேவ வளநாட்டு இக்கனாட்டு நெற்குப்பை மத்யஸ்தன் புருஷோத்தமன் நீலகண்டனுக்கு காவிதி பங்கு அரை”

“அம்பலம் மெழுகித் தொட்டிலிறைச்சுத் தண்ணீரட்டுவானுக்கு நிலம் இருவேலி”

“தைச்சர் கொல்லார்க்கு நிலம் வேலி”

என்று கூறப்பட்டுள்ளது….

#மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்களும் மேற்சொன்னவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட நிலங்களாகும்….யாரிடமிருந்தம் பறித்து வழங்கப்படவில்லை...

#பார்ப்பணர்கள் உட்பட எல்லோருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்கு அனுபோக உரிமை மட்டுமே உண்டு... அவற்றின் உரிமையாளர் அரசு தான்.

#மேற் கூறிய அனைத்து நிலங்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை…

#முதலாம் ஆண்டில் வரியில் 4 ல் 1 பங்கும், இரண்டாம் ஆண்டில் 4 ல் 2 பங்கு வரியும், மூன்றாம் ஆண்டில் 4 ல் 3 பங்கு வரியும் செலுத்தலாம்... நான்காம் ஆண்டில் இருந்து வரிச்சலுகை முடிகிறது... அதாவது அதன் பின்னர் பார்ப்பனர்கள் உட்பட அனைவரும் வரி செலுத்த வேண்டும்….

“....யாண்டு எட்டாவது முதல் பிரம்மதேயமாய் இவ்வூர் இறைகட்டின இறையிலியாண்டு எட்டாவது நாலு கூறிட்ட ஒரு கூறும் இதன் எதிராமாண்டு செம்பாதியும் இதன் எதிராமாண்டு நாலு கூறிட்ட மூன்று கூறும் இதன் எதிராமாண்டு முதல் இவ்வூர் இறைகட்டின இறை ஆட்டாண்டு தோறும் நின்றிறையாயிருப்பதாகவும்” என்று கூறுகிறது.

#ஆனால் கம்மாளச் சேரி, பறைச்சேரி போன்ற பகுதிகளுக்கு முழுவதும் வரி நீக்கப்பட்டுள்ளது…

ஆதாரம் :--

”கரந்தைச் செப்பேட்டுத் தொகுதி” சி.கோவிந்தராசன்,சி.கோ.தெய்வநாயகம்…
--பதிப்புத்துறை--மதுரை காமராசர் பல்கலைக்கழகம்….

No comments:

Post a Comment

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்க...