Wednesday, 29 August 2018

அதிகாரிச்சி

"பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை"
- ஈ.வே.ரா பக்தர்

அப்டியாப்பா?

அதிகாரிச்சி அப்படினா என்னன்னு தெரியுமா?

1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி என்றழைக்கப்பட்டனர்.

அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.

இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து  கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.

உங்கள்  பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை
வேறு எங்காவது போய் பரப்பவும்.

திராவிடப் பொய்களை உடைப்போம்...

நன்றி:- வேட்டொலி

Monday, 27 August 2018

சங்ககால இரு ஊர்கள்

#தொல்லியற்களம்!

#இராமநாதபுரம் மாவட்டம் #உத்தரகோசமங்கை அருகே #திருப்புல்லாணி செல்லும் வழியில் "கீழச்சீத்தை கானத்திடல்” என்ற இடத்தில் 2300 ஆண்டுகள் பழமையான சங்ககால இரு ஊர்கள் 2015ம் ஆண்டு கண்டறியப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசு இதுவரை எந்தவொரு ஆய்வுகளையும் முன்னெடுக்கவில்லை! https://t.co/iHyK91QeGg

Tuesday, 21 August 2018

மங்களம் எனும் சொல் தமிழே

#மங்கலம்-மங்களம்.. சமஸ்கிருதமா???

#ஆரிய கருத்தியலாளர்கள் பலரும் இச்சொற்கள் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென கூறுகின்றனர்...#வழக்கம் போல திராவிட கருத்தியலாளர்களும் ஆமாம்  ஆமாம் மங்கலம் என்பது சமஸ்கிருதச் சொல்தான் எனவே மங்கல நிகழ்வுகளை புறக்கணிக்க வேண்டும் என்றனர்....#அறிஞர் மா.சோ.விக்டர் என்பவர் "உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்" எனும் தனது நூலில் இந்த சொல்லின் மூலமானது தமிழ் தான் என்பதை தகுந்த ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்...

#தமிழர் பண்டிகைகளின் போதும் திருமண நிகழ்வுகளின் போதும் மண் கலயத்தை வைத்து வழிபடுவது சிந்து சமவெளி காலம் தொட்டு இன்றும் தொடரும் மரபு, எனவே தான் நல்ல நிகழ்வுகளின் போது மண் கலம் பெருகட்டும் என்று வாழ்த்துவது மரபு, அதுவே பின்பு மண் + கலம்=மங்கலம் என்றும் பின்பு மங்களம் என்றும் ஆனதென கூறுகிறார்.

#மங்கலம் என்னும் சொல்லிற்கு எப்படி பிரித்து பார்த்தாலும் வடமொழியில் மூலம் இல்லை, எனவே மங்கலம் மங்களம் போன்ற சொற்களின் தாய் தமிழே…

#புகுந்த வீட்டிற்குள் முதன்முதலில் வரும் மருமகள் மண் கலத்தில் (குடத்தில்) தண்ணீரோடு நுழைவது இன்றும் மரபாக உள்ளது(என்ன ஒரு வேறுபாடு இப்பொழுது சில்வர் குடம்)...#புதுமணை புகுவிழாவிலும் முதலில் கொண்டு செல்வது நீர் நிறைந்த மண் கலத்தை தான்... #இறுதிச் சடங்கிலும் கூட மண்கலத்தை(பானை) அருவாளால் கொத்தி உடைப்பது தமிழர் மரபாகும்.. #அதாவது அமங்கல நிகழ்வு (அமண் கலம்)..#உடலை மண் கலத்திற்கு உவமையாகக் கூறுவது தமிழ் மரபு…”#நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒருத் தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி” என்று மனித உடலை மண் கலம் (மண் பானை) என்கிறார் பட்டினத்தார்…
“#மண்ணென்று கண்டீர் இருவினைப் பாத்திரந் திண்ணென்றிருந்தது தீயினைச் சேர்ந்தது-விண்ணின்று நீர் விழின் மீண்டுமண் ணாவைப்போல் எண்ணின்ற மாந்த இருக்கின்ற வாறே”(திருமந்திரம் 143) என்று திருமூலர் மனித உடலின் நிலையாமை குறித்துப் பாடுகையில் மனித உடலை மண் கலம் என்கிறார்...

#ஆக மண்+கலம் என்பதே மங்கலம், மங்களம்...

Monday, 20 August 2018

குறள் எண் 25

#திருக்குறளில் கூறப்பட்ட இந்திரன் யார்???....

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.
#திருக்குறள்--எண்:25
(அதிகாரம்:நீத்தார் பெருமை)

#விளக்கம் :-

#ஐம்புலன்களையும் அடக்கினவனது வல்லமைக்குப் பரந்த வானுலகத்திலுள்ளவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனே சான்றாக அமைவான்.

#இக்குறளில் சொல்லப்பட்ட இந்திரன் என்பவன் யார்?

#இதற்கு உரையெழுதியவர்கள் கூறும் விளக்கங்களைக் காண்போம்...

1.#சமண சமய இந்திரனா?...
மணக்குடவர் எழுதிய உரையில்...இக்குறளில் கூறப்பட்டுள்ள இந்திரன் சமண சமயத்தார் வணங்கும் தேவர்களின் தலைவனான இந்திரன் என்கிறார். தவவலிமையால் ஐம்புலன்களையும் அடக்கிய தவசீலர்களை இந்திரன் தன் தேவர்கள் புடை சூழ வரவேற்று வழிபடுவான். இந்த இந்திரனை தான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார் என்கிறார்..இது சமண நூலான மேருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்கிறார்..ஆனால் இவ்விளக்கம் இக்குறளோடு பொருந்திப் போகவில்லை.ஏனெனில் ஐம்புலன்களையும் அடக்கிய தவசீலர்களை இந்திரன் பணிவதாக இக் குறள் இல்லை.அத்தகைய தவசீலர்களின் சக்திக்கு இந்திரனின் வல்லமையே சான்றாகும் என்று தான் இக் குறளில் உள்ளது.எனவே இவன் சமண இந்திரனல்லன்.

2. #புத்த சமய இந்திரனா?
ஒருவன் புத்த சமய மெய்யியல் நெறிக்கேற்ப ஐம்பொறி-புலன்களை அடக்கி கடுமையாக தவமிருந்தால் இந்திரன் என்ற பதவியை அடைவான் என்கிறது புத்த சமயம்.ஆகவே இக்குறளில் கூறப்படும் இந்திரன் புத்த சமய இந்திரன் தான் என்கிறார்கள்.ஆனால் இக்குறள் ஐம்புலன்களையும் அடக்கியவன் இந்திர பதவியை அடையலாம் என்று கூறவில்லையே. அந்தத் தவசீலன் இந்திரனுக்குச் சமமாவான் என்று தானே கூறுகிறது.ஆகவே இந்த இந்திரன் புத்த சமய இந்திரனுமல்ல….

3. #இந்து சமய இந்திரனா?...
காளிங்கரின் உரைவிளக்கத்தில் கூறியபடி கோசிகன் கதையில் வரும் இந்திரனாக இருக்க முடியாது. ஏனெனில் இதில் நீத்தார் பெருமையும் இல்லை, இந்திரனைச் சான்றாகக் கொள்ளவும் அக்கதையில் ஏதும் இல்லை. எனவே இவரின் உரை ஏற்கத்தக்கதல்ல...

4.#பரிமேலழகர் சொல்லிய இந்து சமய இந்திரனா…
அகலிகை சாபம் பெற்ற கதையில் வரும் #கௌதமர்தான் இங்கு குறிப்பிடப்படும் ஐந்தவித்தான் என்பது பரிமேலழகர் உரை. மனைவியுடன் வாழும் கௌதமரை ஐம்புலன்களையும் அடக்கியவர் என எவ்வாறு கூற இயலும். எனவே கௌதமர் ஐந்தவித்தான் அல்ல. எனவே அவனை இந்திரனாக இக் குறள் கூறவில்லை….

5. #இந்து சமயம் கூறும் தேவர்களின் தலைவனான #தேவேந்திரனா?...
வைதீக (இந்து சமயம்) கூறும் தேவேந்திரன் ஒரு பெண் பித்தன்..ஆகவே ஐம்புலன்களையும் அடக்கிய தவசீலருக்கு அவனை எடுத்துக் காட்டாக கூற முடியாது.மேலும் கோமான் என்று இக்குறளில் இந்திரனை உயர்த்திக் கூறுகிறார் வள்ளுவர். மாற்றான் மனைவியைக் கூடிய காமுகனை கோமான் என்று அவர் அழைக்கமாட்டார்.இதே அடிப்படையில் நகுடன்-இந்திராணி கதையும் இக்குறளுக்குப் பொருந்திவராது; அதில் காணப்படும் இந்திரனையும் இப்பாடல் குறிக்காது. சாபம் விட்ட அகத்தியரும் அல்ல.ஏனெனில் கோபம் என்பதும் ஓர் உணர்சியாகும்.அதைக் கட்டுப்படுத்தாத அகத்தியரையும் திருவள்ளுவர் இதில் கூறியிருக்க முடியாது...

6.#பழந்தமிழ்நூல்கள் கூறும் #தமிழ்க்கடவுள் இந்திரனா?....
ஐந்திணைகளில் மருத நிலத்திற்கு இந்திரன் தெய்வம் எனக் கூறப்பட்டுள்ளது…

#திருவள்ளுவர் “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்” என்ற குறளின் மூலம் ஒழுக்கம் என்பது சமண, புத்த நெறியோ அல்லது வைதீக (இந்து சமய) நெறியோ அல்ல என்று எந்த மதத்தையும் சாராத பொது மானிட ஒழுக்கம் பற்றிக் கூறுகிறார்...ஆகவே அவர் இக்குறளில் கூறிய இந்திரன் தமிழரின் மருத நிலத்தின் இந்திரனையே என்பது சரியானது என்கிறேன் நான்….

#திருக்குறள் ஆரியக்கலப்பற்ற தமிழ் மறையாகும்.

வங்காள ஏரி

சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்க...