சோழர்கள் தற்பொழுது "வங்காள விரிகுடா" என குறிப்பிடப்படும் தமிழர் கடலை, ஏரி என்று தான் குறிப்பிடுவார்கள்; திரைமீளர் வழிவந்தோருக்கு கடல், ஏரியாக காட்சியளிப்பதில் ஆச்சரியமில்லை.
சோழர்கள் தமிழர் ஏரி (வங்காள விரிகுடா) முழுதும் தமது நாவாய்களை இருத்தியிருந்தனர்.
சோழ கடற்படை பல நிலைகளை கொண்டது.
முதல் நிலை - கண்ணி.
இந்த கப்பல் படை சிறிய அளவிலான வேகமாக செல்லக்கூடிய கப்பல்களை கொண்டது. இவர்கள் எதிரி நிலைகளுக்கு சென்று, அவர்களை சீண்டிவிட்டு வேகமாக ஓரிடத்தில் நின்று விடுவர். பின்னால் துரத்தி வரும் எதிரிப்படை, சோழர் படை வைக்கும் கண்ணியில் சிக்கி சிண்ணாப்பின்னமாகும்.
அடுத்த முதல் நிலை - தளம்
இவர்களும் சிறிய அளவிலான படை தான். ஆனால், கண்ணியை போல் அல்லாமல் அடித்து நொருக்குவார்கள். எளிமையாக தலைவரின் கரும்புலிகளை போல..
இடைநிலை - மண்டலம்.
இதில் 40-50 கப்பல்கள் இருக்கும். இவர்கள் கட்டளை தளபதியின் கட்டளையை பொருத்து பலவாறு நிலையெடுப்பார்கள் (Formations). சில சமயம் தனியாகவும், சில சமயம் கூட்டமாகவும் செல்வர். இவர்கள் மரபுவழி கடற்போர் புரிவார்கள்.
அடுத்த இடைநிலை - கணம்.
மூன்று மண்டலங்களை கொண்டது கணம். அப்படியென்றால், 3×50=150 போர் கப்பல்களை கொண்டது.
அடுத்தது கடைநிலை - அணி.
மூன்று கணங்களை கொண்டது, அணி. அப்படியென்றால், 150×3=450 கப்பல்களை கொண்டது.
இறுதியில், நாவாய் கட்டளை நாயகர் படை. அதை "அதிபதி" என்று குறிப்பிடுவார்கள். அனைத்து கட்டளைகளும் அதிபதியிடமிருந்தே பிற நிலைகளுக்கு செல்லும். பிற நிலைகள் இருப்பை அதிபதிக்கு செய்தி அனுப்பி கொண்டே இருக்கும். செய்தி அனுப்பும் அதிவேக படகுகள் தனியாக உண்டு.
பொதுவாக அதிபதியாக கடற்போர் பயிற்சி பெற்ற சோழ இளவரசர்களே, அல்லது சோழர்களின் கீழ் உள்ள சிற்றரசர்களோ தான் இருப்பார்கள்.
இன்றைய நிலையில் பெரும்பாலான நாடுகளுக்கே இத்தகைய கடற்படை
இல்லை. ஆனால், 1000 வருடத்திற்கு முன்னால் சோழன் கடற்படை இப்படியானதாக இருந்தது.
No comments:
Post a Comment